தரணி புகழ் தனித்தமிழ் தலைமுறை கடந்தும் பயணிக்க புறப்பட்டோம்
நாங்கள் தோமினிக் சாவியோ பள்ளியின் இலக்கிய மன்ற இளஞ்சிறார்கள்,
என்,
தமிழே......... அமுதே.....
நித்தம் உன்னை பருக ஆவல் கொள்வோம், பயிற்று வகுப்புகளில் மட்டுமல்லாமல்
மன்ற வகுப்புகளிலும் நின் புகழ் பாடுவோம்,
கற்பனை முகுந்த கட்டுரையாக,
சொற்கள் பயணிக்கும் சொற்பொழிவாக,
விரல்கள் நாவிசைக்கும் இசையாக ,
வினாடியின் விடையாக, விவாதத்தின் மேடையாக,
எத்தனை எத்தனை பரிமாணங்களில் உருவெடுத்தாய்
போட்டியாக எம் திறன் வளர்த்தாய்
தலைமகனைத் தழுவும் தாய்ப்போல்
வெற்றிபரிசாக எம்மிடமே வந்தாய்.....
என்றும் என்னை மகிழ்விக்கும் என் தாயே ...... தமிழே........
உன்னை வணங்கி வாழ்த்துகிறோம்!